காலி மதுபாட்டில் கொடுத்தால் காசு என அறிவிப்பு..!
நீலகிரி மாவட்டத்தில் அரசு மதுபான கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு காலி மது பாட்டில்களை திரும்ப கொடுத்து அந்த பத்து ரூபாயை திரும்ப பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை பல பகுதிகளில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களில் ஏசி எனும் ஸ்டிக்கர் போட்டு விற்பனை செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்டிக்கர் ஒட்டிய காலியான அந்த பாட்டிலை கொடுத்து பத்து ரூபாய் பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.





