--- --:--:-- --

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை..!

6

விருதுநகரில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. ஜோதிமணி என்பவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பும், இரண்டாவது மகள் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

 

மூத்தமகள் பள்ளிக்கு செல்லாத பொழுது ஜோதிமணி அவரிடம் தொடர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.

 

பள்ளிக்கு செல்லும்போது அந்த கடிதம் தலைமை ஆசிரியையின் கையில் கிடைத்ததால் அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜோதிமணியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon