அயன் பட பாணியில் வயிற்றில் போதைபொருள் கடத்தல்..!
உகண்டாவில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 6.58 கோடி ரூபாய் மதிப்புள்ள 940 கிராம் ஹெராயின் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து பெருமளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
விமான நிலைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் உகண்டா நாட்டை சேர்ந்த ஒருவரை சோதனை செய்தனர். அப்பொழுது அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தனர்.
அப்போது வயிற்றுக்குள் கேப்சூல் வடிவில் போதைப்பொருள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் கைப்பற்றினர். 940 கிராம் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





