அம்பேத்கர் புகைப்படம் அகற்றியதற்கு கண்டனம்..!
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படம் வைக்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி அவரது புகைப்படம் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
அம்பேத்கர் படத்தை வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.






