--- --:--:-- --

நாளை காஷ்மீர் செல்லவிருக்கும் பிரதமர்..! இன்று காஷ்மீரில் விபரீதம்..!

7

நாளை பிரதமர் மோடி காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் அங்கு வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

பிரதமர் மோடி நாளை காஷ்மீருக்கு செல்ல உள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஸ்ரீ நகரில் உள்ள நவ்கவ் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

தகவல் அறிந்த போலீசார் பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடந்த பகுதியை பார்வையிட்டு பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

 

Right Menu Icon