தேர்வு நேரத்தில் 3,500 பறக்கும் படைகள் அமைக்கப்படும்..!
பொதுத் தேர்வை கண்காணிக்க 3 ஆயிரத்து 500 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் வருமா உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள், திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேள்வித்தாள் வெளியான விவகாரம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் பொது தேர்வை கண்காணிக்க 3,500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன எனக்கூறினார்.






