--- --:--:-- --

உக்ரைனில் சாலையில் சடலங்கள் சிதறிக்கிடந்த விவகாரம்..!

1

உக்ரேனின் புகா என்ற இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டு சடலங்கள் சிதறிக் கிடந்த நிலையில் அதற்கு காரணம் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. தலைநகர் கீவுக்கு அருகே உள்ள புகா என்ற நகரத்தில் உள்ள சாலையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் சிதறிக் கிடந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த காட்சிகள் தனக்கு பேரதிர்ச்சியை தந்ததாக ஐநா பொதுச்செயலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 

இது ஒரு இனப்படுகொலை என்றும் இதை செய்தது ரஷ்யா என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார். படுகொலைகளை செய்து விட்டு தங்கள் மீது குற்றம் சாட்டுகிறது என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகளால் ஒரு பொது மக்கள் கூட உயிரிழக்கவில்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon