எலி கடித்ததில் ஐசியு நோயாளி உயிரிழப்பு..!
ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் எலி கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாராங்கலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் 38 வயதான ஸ்ரீநிவாஸ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மது பழக்கத்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சீனிவாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஐசியுவில் எலி கடித்ததால் அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இடப்பக்கம் முழுவதும் ரத்தப்போக்கு இருந்தால் அதற்கான ஆதாரத்தையும் கொடுத்திருக்கின்றனர். புகாரை தொடர்ந்து ஐசியு பிரிவு தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டதால் மருத்துவமனை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





