நூல் விலை உயர்வால் திருப்பூர் மக்கள் பாதிப்பு..!
திருப்பூரில் அனைத்து ரக நூல் விலையும் கிலோவுக்கு 30 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தொழில்துறையினர் அச்சமடைந்துள்ளனர். மாதந்தோறும் நூல் விலை உயர்த்தப்பட்டு வருவதால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு 30 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 440 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஏற்கனவே நூல் விலை உயர்வால் திருப்பூரில் ஏராளமான சிறு குறு பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கொரொனா தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாத நிலையில் நூல் விலை உயர்வால் பின்னலாடை நிறுவனங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றன.
மேலும் இந்த நிலை நீடித்தால் ஒட்டுமொத்த பின்னலாடை நிறுவனங்கள் ஸ்தம்பிப்பதோடு பல நிறுவனங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என தொழில் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





