மீரா மிதுனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு..!
வன்கொடுமை தடைச் சட்டம் வழக்கில் ஆஜராகாததால் பிடிவாரண்ட்டில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இருந்து வந்த நிலையில் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜாமீன் கோரி மீராமிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மீராமிதுனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





