இரண்டாவது முறையாக தப்பிய சிறுவன்..!
கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் தப்பி ஓடியதால் போலீசார் தேடி வருகின்றனர். திருச்செங்கோட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி சேலத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் இருந்த சிறுவன் கடந்த 25ஆம் தேதி தப்பி ஓடியுள்ளார். சிறுவனை தேடிய போலிஸார் திருச்செங்கோடு வீட்டில் இருந்து மீட்டு மீண்டும் கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்து வந்தனர்.
இதில் கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்து வந்தவர் சிறுவனின் கண்களில் இருந்த காயம் குறித்து கேட்டுள்ளார். அப்பொழுது சிறை வாடன் தாக்கியதால் காயம் ஏற்பட்டது என சிறுவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நீதிபதி அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு சேர்க்கப்பட்ட சிறுவன் தப்பி ஓடியதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




