--- --:--:-- --

இலங்கை முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு..!

1

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக நாளை மிகப்பெரிய போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த ஊரடங்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வரும் நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் உணவு எரிபொரளுக்காகவும் மக்கள் அல்லல் பட்டு வருகிறார்கள்.

 

இந்த நிலையில் ஆளும் அரசாங்கத்தின் மீதான அதிருப்தி கோபமாக மாறுகிறது. இதனால் பல போராட்டங்கள் வெடிக்க தொடங்கியிருக்கின்றன. இதனால் அரசுக்கு எதிராக நாளை மிகப்பெரிய போராட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon