போலீசுக்கே கொலை மிரட்டல் விடுத்த ரவுடி…!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விசாரணைக்கு அழைத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் அர்ஜுனன் என்பவர் கடந்த 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக புதூர் பகுதியிலுள்ள நபரை தொலைபேசியில் அழைத்துள்ளார். தான் ஒரு மிகப் பெரிய ரவுடி என்றும் தன்னை விசாரணைக்கு எடுத்தது தவறு என எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஆபாசமாக பேசி காவல் உதவி ஆய்வாளர் பகிரங்க கொலைமிரட்டல் விடுப்பது தொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து ரவுடியை தேடி வந்த நிலையில் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.
காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் செந்தில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





