தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் இன்று பதவியேற்பு..!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று முறைப்படி பதவியேற்கவுள்ளனர். கடந்த 2019இல் பதிவான வாக்குகள் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஞாயிறன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதன் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷாலும் பொருளாளராக கார்த்திக் என அனைத்துப் பதவிகளிலும் பாண்டவர் அணி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் பெற்றுக்கொண்டனர். இன்று எளிய முறையில் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்க உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





