ஓடும் பேருந்தில் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனர்..!
சேலத்தில் இருந்து கோவை சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த 22 வயது இளம் பெண் கோவையில் உள்ள குரூப் தேர்வு பயிற்சி மையத்தில் படிக்க செல்வதற்காக சேலத்திலிருந்து அரசு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் பேருந்து நடத்துனர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





