கனடாவில் விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு..!
கனடாவில் நடந்த சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சனிக்கிழமையன்று நெடுஞ்சாலை 401 இல் பயணிகள் வேனில் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 3:45 மணியளவில் டிராக்டர்-டிரெய்லர் மீது மோதினர்.
கனடாவில் நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். என்றத் தகவலை இந்திய ஹை கமிஷனர் அஜய் பிசாரியா இன்று தெரிவித்தார். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்ராறியோ நெடுஞ்சாலையில் சனிக்கிழமைய்ன்ரு இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி படு காயமடைந்த இரண்டு மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்ட அஜய் பிசாரியா உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




