பஞ்சாப் முதலமைச்சராக பகவந்த் மான் இன்று பதவியேற்பு..!
பஞ்சாப் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் இன்று பதவியேற்கவுள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் கிராமமான கற்க களனில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சி நடப்பதற்கு 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக 50 ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளது.
சுமார் மூன்று லட்சம் பேர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவிற்கு முன் ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகை கட்டி வருமாறும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டா அணிந்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்மட்ட அதிகாரிகள் உட்பட சுமார் பத்தாயிரம் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






