விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நடிகர் சிம்பு..!
சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு மாலை 6 மணிக்கு வர வேண்டிய நடிகர் சிம்பு இரண்டரை மணி நேரம் தாமதமாக இரவு 8.45 மணிக்கு விழா அரங்கிற்குள் சென்றிருக்கிறார்.
இதனால் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, சிம்புவுக்காக தன்னால் காத்திருக்க முடியாது எனக் கூறி அங்கிருந்து படபடவென புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
சிம்பு இதோ வருகிறார், அதோ வருகிறார் என மேடையில் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கும் போதே விழாவில் கலந்துகொண்ட புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணனும் பொறுமையிழந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




