--- --:--:-- --

அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போன் பயன்படுத்தக்கூடாது..!

6

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போனில் நேரத்தை வீணடிக்க அனுமதிக்கக்கூடாது எனவும் மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

 

அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும் வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் கூறினார். அலுவலக பயன்பாட்டுக்கு ஊழியர்களுக்கு தனி செல்போன், தொலைபேசி பயன்படுத்த நடவடிக்கை தேவை என தெரிவித்தார்.

 

அரசு ஊழியர் விதிப்படி மருத்துவத்துறை செயலாளர் வழிகாட்டுதரை உருவாக்கி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கூறினார். பணியின் போது செல்போனில் வீடியோ எடுத்த அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிரான வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

 

உத்தரவை 4 வாரங்களில் நிறைவேற்ற உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஆணையிட்டுள்ளார். அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக உரிய விதிகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon