--- --:--:-- --

உக்ரைன் ரஷ்யா இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும்..!

4

உக்ரைன் ரஷ்யா இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் , ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

 

போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளிடையே இதுவரை மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதைப் போன்று இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் போர்நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

 

இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் போர்நிறுத்தம், படைகளை உடனடியாக திரும்பப் பெறுவது மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம் கொடுப்பது என சில மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் இந்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon