--- --:--:-- --

காதல் ஜோடியிடம் வம்பிழுத்த இருவரின் மண்டை உடைப்பு..!

2

சென்னை மெரினா கடற்கரையில் காதல் ஜோடியிடம் வம்பு இழுத்ததால் ஏற்பட்ட தகராறில் இருவரின் மண்டை உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரையில் அமர்ந்து இருந்த காதல் ஜோடியை அங்கிருந்து சுமார் ஐந்து பேர் கொண்ட கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது. காதல் ஜோடி வேறு இடத்திற்கு சென்று அமர்ந்த பொழுது அங்கு சென்றும் தடுத்துள்ளனர். அதோடு கடற்கரையை விட்டு வெளியேற சொன்னதாக தெரிகிறது.

 

ஆத்திரமடைந்த காதலன் செல்போனில் தொடர்பு கொண்டு நண்பர்களை வரவழைத்துள்ளார். கடற்கரைக்கு வந்த அவரது நண்பர்கள் காதல் ஜோடியை மிரட்டியவர்களை சரமாரியாக தாக்கியது. இதில் இருவருக்கு மண்டை உடைந்து உள்ளது.

 

Right Menu Icon