--- --:--:-- --

சசிகலா, இளவரசிக்கு பிணை வழங்கியது பெங்களூரு நிதிமன்றம்..!

6

சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபொழுது சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

வழக்கில் ஐந்து மற்றும் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராகி பிணை வழங்க கோரிக்கை விடுத்தனர். 3 லட்சம் ரூபாய் ரொக்கம் செலுத்த உத்தரவிட்டு அவர்களுக்கு நீதிபதி பிணை வழங்கினார்.

 

முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சிறைத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகுமார், அனிதா ஆகியோர் வழக்கிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளதால் அவர்கள் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

 

இந்த வழக்கில் மூன்று மற்றும் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சிறைத் துறை இணை கண்காணிப்பாளர் சுரேஷ், காவலர் ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டது. ஏப்ரல் 16 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon