10 ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவிப்பு..!
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எண் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் வரும் மே மாதம் ஆறாம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர் பட்டியலை இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வின் பட்டியலை www.tn.dge.gov.in என்ற இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





