--- --:--:-- --

முதல்வர் தலைமையில் ஆட்சியர்கள் மாநாடு..!

6

முதலமைச்சர் தலைமையில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

தமிழக அரசு கடந்த 10 மாதங்களில் மொத்தமாக 1704 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவற்றில் 80 சதவீத அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

 

மீதமுள்ள அறிவிப்புகள் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும் அதனை விரைவு படுத்தும் வகையிலும் ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற உள்ளது.

 

இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம் சட்டம் ஒழுங்கு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்க உள்ளது.

 

பிற்பகல் ஒரு மணி வரை ஆட்சியர்கள் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும். பிற்பகல் நான்கு முதல் மாலை ஆறு முப்பது மணி வரை காவலர்களின் கூட்டம், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon