--- --:--:-- --

சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ1 லட்சம் அபராதம்..!

4

சிம்பு தாக்கல் செய்த வழக்கை எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்யாததால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நடிகர் சிம்பு நடித்த 2017 இல் வெளியான படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இணையதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறி அவருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மூன்று ஆண்டுகளாகியும் வழக்கு எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்யாததால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon