சூரிய வேலியைத் தாண்டும் ஒற்றை யானை..!
கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சார வேலியை தாண்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் அருகே யானை ஒன்று காபி தோட்டத்திற்குள் புகுந்து உள்ளது.
அந்த யானை தோட்டத்தில் அமைக்கப்பட்ட சூரிய மின்சார வேலியை தாண்ட முடியாமல் சிறிது நேரம் அங்கேயே நின்றது. பின்னர் தோட்டத்திலுள்ள ஒரு மரத்தை முறித்து சூரிய மின்சார வேலி மீது வீசியதால் வேலியின் கம்பிகள் துண்டிக்கப்பட்டன.
பின்னர் அந்த யானை லாகவமாக வேலியை தாண்டி சாலையில் நடந்து சென்றது. மற்றொரு தோட்டத்திற்குள் சென்று காபி தோட்டத்தில் புகுந்த யானை வேலியைத் தாண்டும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.






