--- --:--:-- --

பாலியல் வழக்கில் பிரபல இயக்குனர் கைது!

12

சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது தொடர்கதையாகிவிட்டது. தற்போது பிரபல மலையாள இயக்குனர் லிஜு கிருஷ்ணா தனது டீமில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு கடந்த ஆறு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பதிவான புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

 

கேரளாவின் கண்ணுரில் இருக்கும் ஒரு ஸ்டேஷனில் தான் புகார் பதிவாகி இருக்கிறது. லீஜு அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த ஆறு மாதங்களாக சீரழித்து இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

 

புகார் அளித்த பெண் யார் என்ற விவரத்தை போலீஸ் ரகசியமாகவே வைத்திருக்கிறது. லிஜு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

Right Menu Icon