பள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவர் உயிரிழப்பு..!
ஆந்திராவில் பள்ளி விடுதியில் தூக்கிக் கொண்டிருந்த மாணவர் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகர மாவட்டத்திலுள்ள குருகம் நகரில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆண்கள் பள்ளி விடுதி உள்ளது.
இங்கு நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் வம்சி, ரஞ்சித், நவீன் ஆகிய மூன்று மாணவர்களை விஷப்பாம்பு கடித்து உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் மூவரும் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு ரஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் மகேஷ்குமார் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





