அமெரிக்கா உடனான விண்வெளி உறவு துண்டிப்பு..!
அமெரிக்கா மீதான கடுமையான நிலைப்பாட்டை ரஷ்யா எடுக்கத் தொடங்கியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் எட்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலைய பணிகளை அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் ஜப்பான், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இணைந்துள்ளன.
அங்கு உலக விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு இணைந்து பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த ஒத்துழைப்பை ரஷ்யா முழுமையாக முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.





