இந்திய கொடியை பயன்படுத்தி தப்பிய பாகிஸ்தானியர் மற்றும் துருக்கியர்கள்..!
உக்ரைனில் இருந்து பாகிஸ்தானியர்களும், துருக்கியர்களும் இந்தியக் கொடியை பயன்படுத்தி பத்திரமாக தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கிருந்த இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
வரும் வழியில் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்திய மாணவர்கள் தேசியக் கொடியை தூக்கி பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முறையை கடைப்பிடித்து ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளுக்கு ஏராளமான இந்தியர்கள் வந்துள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானியர்களும், துருக்கியர்களும் இந்தியக் கொடியை போர்த்தி கொண்டு தாக்குதலில் இருந்து தப்பித்ததாக இந்திய மாணவர்கள் கூறினர்.
உக்ரைனில் இந்திய கொடி கிடைக்காததால் கடைகளிலும், வீடுகளிலும் துணியை வாங்கி தேசிய கொடியை உருவாக்கி அதை வைத்து கொண்டதாகவும் மாணவர்கள் கூறினர்.






