குடிபோதையில் தகராறு செய்த கணவனை தீயிட்டு எரித்துக் கொன்ற மனைவி..!
தென்காசி மாவட்டம் சிவகிரியில் குடிபோதையில் தகராறு செய்த கணவனை தீயிட்டு எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். சிவகிரியை சேர்ந்த பாண்டி, முத்துமாரி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கட்டட தொழிலாளியான பாண்டி தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 23ஆம் தேதி குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவன் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார்.
பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






