--- --:--:-- --

சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கல்லூரி மாணவர்..!

6

சென்னையில் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி போதை பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சினிமாத்துறை நடிகர் மற்றும் கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

பாட்டியின் அரவணைப்பில் வசித்து வந்த அந்த சிறுமி தனது வீட்டுக்கு சாப்பிட செல்லும்போது தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறிய வசந்த் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

 

இந்த விஷயத்தை தனது நண்பர்களிடம் கூறவே பின்னர் 4 பேரும் சேர்ந்து ஏற்கனவே நடந்ததை வைத்து இச்சைக்கு இணங்குமாறு சிறுமியை மிரட்டி இருக்கிறார்கள். எனவே அழைத்து சென்று போதை பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon