திரைப்பட இயக்குநர் மீது கோவை தம்பதி புகார்..!
பண மோசடி செய்ததாக தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் அதன் மீது கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின். படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவர் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
சில நாட்களில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இவர் மீது கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தம்பதியினர் அகஸ்டின் பிரபு மீது பணமோசடி புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
பல தவணைகளில் ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் பணம் பெற்றதாகவும் அதன் பிறகு அதனை தர மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே தங்கள் பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர்.






