--- --:--:-- --

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் ..!

6

கிருஷ்ணகிரி நகராட்சியில் முதல் 4 வார்டுகளில் தி.மு.க. வெற்றி அடைந்துள்ளது. கடலூர் மாநகராட்சியில் 2 வார்டுகளில் தி.மு.க. வெற்றி; 2 வார்டுகளில் வி.சி.க. வெற்றி அடைந்துள்ளது.

 

கரூர் மாநகராட்சி 2வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வடிவேலரசு வெற்றி அடைந்துள்ளது.கரூர் மாநகராட்சி 3வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சக்திவேல் வெற்றி அடைந்துள்ளது.

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பேரூராட்சி 1 வது வார்டில் தி.மு.க.வும், 2 வது வார்டில் அ.தி.மு.க.வும் வெற்றி அடைந்துள்ளது.

 

தேனி மாவட்டம் தாமரைக்குளம் பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வசந்தா வெற்றி அடைந்துள்ளது. தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சி 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் குமரேசன் வெற்றி அடைந்துள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி 2 வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கவிதா வெற்றி அடைந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சி 1வது வார்டில் பா.ஜ.க., பொன்மனை பேரூராட்சி 1வது வார்டில் காங்கிரஸ், கன்னியாகுமரி பேரூராட்சி 1வது வார்டில் பா.ஜ.க. மற்றும் 2வது வார்டில் திமுக வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி 3வது வார்டில் தி.மு.க. வெற்றி அடைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி 1,2 -வது வார்டுகளில் அ.தி.மு.க.வும், பாலக்கோடு பேரூராட்சியில் 1,3,4-வது வார்டுகளில் தி.மு.க.வும் வெற்றி அடைந்துள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி 1வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் பிரபின் ராஜ் வெற்றி; 2வது வார்டில் பாஜக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி அடைந்துள்ளது.

 

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி 4வது வார்டில் அருணகிரி சந்திரசேகர், 5வது வார்டில் ராஜ் குமார் ஆகிய 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளது.

 

தஞ்சை மாவட்டம் வல்லம் பேரூராட்சி 1 வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் செல்வராணி வெற்றி அடைந்துள்ளது. அரியலூர் நகராட்சி 1வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஜேசுமேரி 9 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது. சேலம் மாவட்டம் அரசிராமணி பேரூராட்சி 1 மற்றும் 2வது வார்டில் திமுக வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளது.

 

51 வார்டுகளை கொண்ட தஞ்சை மாநகராட்சியின் 8வது வார்டில் திமுக வெற்றி அடைந்துள்ளது.பெரம்பலூர் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி 1வது வார்டில் திமுக வெற்றி அடைந்துள்ளது. ஒரத்தநாடு 1,2வது வார்டுகளில் அமமுக வெற்றி அடைந்துள்ளது.கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியின் 1,2வது வார்டுகளில் திமுக வெற்றி அடைந்துள்ளது.

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 2வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி வேலன் வெற்றி அடைந்துள்ளது.மதுரை மாநகராட்சி 14வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் அந்தோணி அம்மாள் வெற்றி அடைந்துள்ளது.

 

திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் ஒன்றில் திமுக வெற்றி அடைந்துள்ளது.திருச்சி 29வது வார்டில் திமுக வேட்பாளர் முஸ்தபா வெற்றி அடைந்துள்ளது.

Right Menu Icon