முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளுக்கு 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்ற போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.






