--- --:--:-- --

வீட்டிற்குள் சிக்கி கொண்ட 7 வயது சிறுமி ஏணி வைத்து மீட்பு..!

8

சென்னை கோயம்பேடு பகுதியில் வீட்டிற்குள் சிக்கிய குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மோகனப்பிரியா என்பவர் தனது இளைய மகள் சாய் கிரீனா என்ற 7 வயது சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததால் மூத்த மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றுள்ளார்.

 

திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு திறக்க முடியாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மூன்றாவது தளத்திற்கு சென்று வீட்டின் பின்பக்க கதவை திறந்து குழந்தையை மீட்டுள்ளனர்.

 

Right Menu Icon