--- --:--:-- --

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக வெளியாகியுள்ள 10 முக்கிய அறிவிப்புகள்..!

4

மிழகத்தில் கூடுதல் தகவல்களுடன் ஊரடங்கு மார்ச் 2-ஆம் தேதி வரை நீடிக்கிறது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது நிகழ்வுகளுக்கு உள்ள தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 200 நபர்களுக்கு மட்டும் அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்படும். வரும் 16ஆம் தேதி முதல் மழலையர், நர்சரிப் பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

 

கொரொனா பரவலில் இருந்து மக்களை காத்திட அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடைகளின் நுழைவுவாயிலில் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலம் சோதனை சோதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon