--- --:--:-- --

திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு..!

4

ர்நாடகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்கள் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மாணவர்கள் போராட்டத்தால் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை பிப்ரவரி 14ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.

 

11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிலையங்களை திறப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறினார். மேலும் கல்வி நிலையங்களில் அமைதியான சூழல் நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பசவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Right Menu Icon