புதுச்சேரி அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்புமாணவி ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு..!
புதுச்சேரி அரியாங்குப்பம் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவரை ஹிஜாப் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த புகாரை அடுத்து விசாரணை குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பரிந்துரைத்துள்ளார். அரியாங்குப்பம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கெடுத்துள்ளார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோரிடம் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவர்களிடையே பிரிவினை வரக்கூடாது என ஹிஜாப் அணியத் தவிர்க்க தலைமை ஆசிரியர் கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புகார் எழாமல் தடுக்க பல்வேறு அமைப்பினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் புகார் தெரிவித்துள்ளனர். விவகாரத்தில் உண்மை தன்மை குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்குழு அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.






