பாஜக வென்றால் இலவச இன்டர்நெட் வசதி..!
மதுரை மாநகராட்சியை பாஜக கைப்பற்றினால் மாநகர் முழுவதும் மாணவர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் என முன்னாள் எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவரை ஆதரித்து மதுரை மாவட்ட தலைவர் சரவணன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் உங்களது பிரச்சனைகளுக்கு எதுவாயினும் உடனடியாக தீர்த்து வைப்பார் எனவும் அவர் வரவில்லை என்றால் நான் உங்களிடம் வருவேன் என்றும் கூறினார்.
மாநகராட்சியில் பெரும்பான்மையுடன் பாஜக பொறுப்பேற்றால் ஒன்றிய அரசின் திட்டங்களை உடனடியாக மதுரைக்கு கொண்டுவர முடியும் எனவும் மதுரை மாநகர் முழுவதும் மாணவர்கள் கல்வி பயில இலவச இண்டர்நெட் வசதி செய்து தரப்படும் எனவும் கூறினார்,






