--- --:--:-- --

கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டி: கட்சி உறுப்பினர் இருவர் நீக்கம்..!

11

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

 

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன் பூண்டி நகராட்சியில் ராக்கியாபாளையம் மேற்கு கிளை உறுப்பினர் எஸ்.மூர்த்தி, பல்லடம் நகராட்சியில் 4, 5ஆவது வார்டு கிளை உறுப்பினர் ஏ.சமீரா பானு ஆகியோர் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில், கட்சி கட்டுப்பாட்டை மீறி போட்டியிட மனுச் செய்துள்ளனர்.

 

எனவே கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். கட்சி தோழர்கள் யாரும் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வெற்றியை உறுதி செய்ய முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.

Right Menu Icon