--- --:--:-- --

சூட்கேஸில் இருந்து பெண் உடல் மீட்பு..!

1

திருப்பூரில் சூட்கேசில் பெண்ணின் உடல் அடைத்து வீசப்பட்டது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் தாராபுரம் சாலையில் இன்று காலை 7 மணி அளவில் கால்வாயில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது.

 

இதனை அந்த பகுதியில் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்த பொழுது அந்த சூட்கேசுக்குள் 30 முதல் 35 வயதுமிக்க ஒரு பெண் சடலம் ஒன்று அடைத்துக்கொண்டு கிடந்துள்ளது.

 

உடனடியாக அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வழக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

 

Right Menu Icon