இன்று பள்ளி கல்லூரிகளுக்கு அரசு பொது விடுமுறை..!
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மகாராஷ்டிர மாநிலம் அறிவித்துள்ளது.
கொரொனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 92.
சுமார் 20 நாட்களுக்கு மேலாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று அடுத்தடுத்து பல உறுப்புகள் செயலிழக்க 8 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.






