--- --:--:-- --

மசாஜ் பண்ண ஆசைப்பட்டதால் வந்த வினை..!

9

சென்னையில் மசாஜ் செய்து கொள்ள ஆசைப்பட்டவரிடம் நூதன முறையில் பணம் பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மசாஜ் செய்து கொள்வதற்காக செல்போனில் ஒருவரை தொடர்பு கொண்டிருக்கிறார்.

 

மசாஜ் செய்வதற்கு 2,500 ரூபாய் பணம்செலுத்த வேண்டும் என கூறியதால் பிரபாகரன் முடிவை கைவிட்டு இருக்கிறார். இந்த நிலையில் பிரபாகரனை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் அவருடைய செல்போனில் இருந்த குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை எடுத்து விட்டதாகவும் 22 ஆயிரம் ரூபாய் கட்டினால் விட்டுவிடுவதாகவும், அவற்றை அனுப்பவில்லையென்றால் அவற்றை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.

 

இதையடுத்து மர்ம நபர் வங்கி கணக்கிற்கு அவர் 2000 ரூபாய் செலுத்தியிருக்கிறார். இதையடுத்து மீண்டும் பிரபாகரனை தொடர்பு கொண்ட மர்மநபர் மேலும் 8000 ரூபாய் கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரபாகரன் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகிறார்கள்.

 

Right Menu Icon