8 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை..!
தமிழகம் உள்ளிட்ட 8 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் கொரொனா பரவலுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுகாதார துறை அமைச்சருடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். காணொளி வாயிலாக நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தென் மாநிலங்களில் கொரொனா தொற்று நிலவரம், பொது சுகாதாரத் துறையின் தயார் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
முன்னதாக வட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்திய நிலையில் இன்று தமிழகம் உள்ளிட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளது குறிப்பிடத்தக்கது.





