--- --:--:-- --

தீக்குளிப்பது போல் மகள் நடித்ததில் தாய் தீயில் கருகி உயிரிழப்பு..!

3

அதிகாரிகளை மிரட்டுவதற்காக தீக்குளிப்பது போல் மகள் நடித்ததில் தாய் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி இவரது மகன் சரவணனை அவரது அத்தைக்கு குழந்தை இல்லாத காரணத்தால் சிறுவயதிலிருந்தே வளர்த்து வந்துள்ளார்.

 

இந்தநிலையில் சரஸ்வதி வாழும் வீடு தன்னுடையது என சரவணன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி அம்பை நீதிமன்றம் அவர்களை காலி செய்ய உத்தரவிட்ட நிலையில் கடந்த 17ம் தேதி அதிகாரிகள் அவரை அப்புறப்படுத்த வந்துள்ளனர்.

 

அப்பொழுது சரஸ்வதியும் அவரது மகளும் தீக்குளிப்பு மிரட்டல் விடுத்த நிலையில் மகள் பற்ற வைத்த தீயில் சரஸ்வதி மீது தீ பிடித்தது. போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து இருந்த நிலையில் சரஸ்வதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகள் சோலையம்மா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon