--- --:--:-- --

ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்..!

5

துரையில் அரசு பேருந்தில் ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களை போக்குவரத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்ற பயணிகள் பாதுகாப்பான முறையில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

 

இந்நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அலுவலகம் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் நின்று பயணம் செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருவதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon