நடிகை ஜாக்குலின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்..!
200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வெளிநாட்டிற்கு செல்ல முயன்றதால் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பிரபல மருந்து கம்பெனி உரிமையாளர் மனைவியிடம் ரூபாய் 200 கோடி மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக முக்கிய பிரமுகரும், அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அவரை நேரில் அழைத்து விசாரித்தனர்.
இந்தநிலையில் அவருக்கு எதிராரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் ஜாக்குலினை வெளிநாடு செல்ல அனுமதிப்பது சரியாக இருக்காது என கூறி அவரை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.






