ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று வெளியான சுற்றறிக்கை ரத்து..!
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் பகுதியில் அதிகாரிகள், ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அனுப்பப்பட்டிருந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் டிசம்பர் மாதம் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று 29 ஆம் தேதியன்று தலைமை பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இப்பொழுது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.






