பொங்கல் தொகுப்பில் பரிசு பணத்தை சேர்க்கவேண்டும்..!
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பணத்தை சேர்த்து வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு பொங்கல் தொகுப்பு அறிவிப்பு வெளியிட்டிருப்பதையடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கில் அதிமுக ஆட்சியில் பரிசுப் பணம் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.
தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் பரிசுப் பணத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.






